75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மைய மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை தலைவர், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை தொடங்கியது.
அப்போது பேசிய அவர், அரசிலமைப்பு நாள் என்பது நம் நாட்டு தலைவர்களின் நினைவு கூறும் நாள். இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் குடும்ப அரசியல் செய்கிறது. குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம். குடும்ப அரசியல் செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. கட்சியின் ஒட்டு மொத்த அமைப்பும் ஒரே குடும்பத்துடன் இருக்கக்கூடாது. ஒரு கட்சியை ஒரு குடும்பம் வழிநடத்துவது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்று பேசியுள்ளார்.