விஷம் குடித்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரங்காபுரத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு பூங்கோதை என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் பூங்கோதை தன் கணவருடன் வசித்து வந்தார். இதில் பூங்கோதை தீராத மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் பூங்கோதை விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் பூங்கோதையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூங்கோதை பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.