Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. மாட்டி கொண்ட டாஸ்மாக் விற்பனையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள இருமத்தூர் பகுதியில் கம்பைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓட்டல் பின்புறம் மூட்டையுடன் நின்ற ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர் இருமத்தூரை சேர்ந்த சுரேஷ் என்பதும், போச்சம்பள்ளி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்ப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் சுரேஷ் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சுரேசை கைது செய்து அவரிடமிருந்த 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |