பாகிஸ்தானின் கடன்சுமை 50.5 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் செப்டம்பர் மாதம் 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் மொத்த கடன் சுமை குறித்து அந்நாட்டு ஸ்டேட் பாங்க் வெளியிட்டுள்ளது.
அதன்படி பாகிஸ்தானின் கடன் சுமை அந்நாட்டு பணமதிப்பு படி 50 டிரில்லியன் ரூபாயாக உள்ளது. இம்ரான் கான் பதவியேற்றதிலிருந்து அந்நாட்டு கடன் சுமை அதிகரித்து வருவதாக கருத்துகள் வெளியாகியுள்ளன. ஆனால் ஸ்டேட் பாங்க் வெளியிட்டுள்ள இந்த கடன் சுமை குறித்த அறிவிப்பை முற்றிலுமாக சர்வதேச நிதியம் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.