தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.