பிரான்சை சேர்ந்த பணக்கார பெண் இந்தியர் ஒருவரை காதலித்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி லோரி ஹெரால் எனும் இளம்பெண் பாரிஸில் தொழிலதிபராக உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற சுற்றுலா வழிகாட்டியை சந்தித்து அவருடன் காதல் வயப்பட்டிருகிறார். பின்னர் மேரி பாரிஸ் சென்றபிறகு செல்போன் மூலம் இருவரும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேரி ராகேசை பாரிசுக்கு அழைத்து சென்று அங்கு ஜவுளி தொழில் வைத்து கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் மேரி மற்றும் ராகேஷ் திருமணம் பீகாரில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் இந்திய கலாச்சாரப்படி எளிமையாக நடந்தது. இந்த தம்பதி ஒரு வாரத்திற்குப் பிறகு பாரிஸ் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.