Categories
உலக செய்திகள்

”எச்சரிக்கும் வைகோ”…. இலங்கை அதிபர் வரக் கூடாது….!!

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்று, இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெற்றி பெற்றதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். மோடியின் வரவேற்பை ஏற்ற, கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

இந்தியா வரும் கோத்தபய ராஜபக்ச, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்து பேசவுள்ளார். இவரது வருகையையொட்டி குடியரசுத் தலைவர் இல்லமான ராஷ்டிரபதி பவனில் சிறப்பு உபசரிப்பு நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இலங்கை அதிபராக பதவியேற்ற பின்பு கோத்தபய ராஜபக்சவின் முதல் வெளிநாட்டு பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோத்தபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |