தெற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 28ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
நேற்று தமிழக்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக தென் மாவட்டங்களில் பல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக களக்காடு கீழபெத்தையில் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.