ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு தக்கோலம் சாலையின் குறுக்கே இருக்கும் கொசஸ்தலை ஆற்றில் 5௦ வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடித்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடியுள்ளனர். பின்னர் இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணியை அவர்கள் கைவிட்டனர்.
இதனை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் பணியை காலை நேரத்தில் தொடங்கியுள்ளனர். அப்போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் தக்கோலம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பதும், அவர் கூலித்தொழில் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.