Categories
அரசியல் மாநில செய்திகள்

வருவாய் அலுவலர் நேரில் உறுதி…. போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜோதிமணி எம்பி….!!! 

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு வந்த ஜோதிமணி எம்பி தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க விரைவில் முகாம் நடக்கும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் உறுதி தந்தவை தொடர்ந்து தனது போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ADIPமுகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து எமது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

மக்கள் நலனில் அக்கறையுள்ள முதல்வர் mkstalin, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் KS_Alagiri ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்  KN_NEHRU, சட்டமன்ற காங் கட்சி தலைவர் SPK_TNCC, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ThiruArasarINC சிறுபான்மை ஆணைய தலைவர் PeterAlphonse7 ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் என்னோடு துணைநின்ற கரூர் நாடாளுமன்ற தொகுதியின் எமது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகோதர,சகோதரிகள்,ஊடக நண்பர்கள்,காவல்துறையினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |