Categories
கல்வி பல்சுவை

5,8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

5,8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடுட்டுள்ள அறிக்கையில், 5ஆம் வகுப்பிற்கான தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி முடிவடைகிறது. இதில் ஏப்-15ஆம் தேதி தமிழ், ஏப்-17ஆம் தேதி ஆங்கிலம், ஏப்-20ஆம் தேதி கணக்கு ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன

இதேபோல் 8ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறும். இதில் மார்ச்-30ஆம் தேதி தமிழ், ஏப்-2ஆம் தேதி ஆங்கிலம், ஏப்-8ஆம் தேதி கணக்கு, ஏப்-15ஆம் தேதி அறிவியல், ஏப்-17ஆம் தேதி சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன.

தேர்வுகள் அனைத்தும் காலை 10மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.15மணி வரை நடைபெறும். இதில் மாணவர்கள் வினாத்தாளை படிக்க 10நிமிடங்கள், விடைத்தாளைப் பூர்த்தி செய்ய ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |