Categories
மாநில செய்திகள்

BREAKING : முல்லை பெரியாறு அணை தொடர்பாக….  உச்சநீதிமன்றத்தில் புதிய மனு…. தமிழக அரசு…!!!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் வந்தவண்ணம் உள்ளது. ஒரு பக்கம் முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் தேக்கம் 142 அடியிலிருந்து குறைத்து 136 அடி உள்ளபோதே தண்ணீர் திறந்து விடப்பட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் பலரும் ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மற்றொரு பக்கம் பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு முதலில் ஒப்புதல் வழங்கிய கேரள அரசு அதனை திரும்பப் பெற்றது.

இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்ட அனுமதி கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ‘அணையை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டவும் அனுமதி வேண்டும் என்றும், முதலில் அனுமதி வழங்கிய கேரள அரசு அதனை திரும்பப் பெற்றது எனவும்’ அதில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |