Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நான் எந்த தவறும் செய்யவில்லை” ஆசிரியரின் தற்கொலை வழக்கு…. டைரியில் இருந்த தகவல்கள்…!!

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஆசிரியர் எழுதிய டைரியை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாலியல் தொல்லை காரணமாக கரூரில் தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த அதே பள்ளியில் சரவணன் ஆசிரியராக வேலை பார்த்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து காவல்துறையினர் சரவணன் எழுதிய டைரியை கைப்பற்றியுள்ளனர். அதில் மாணவர்கள் ஏன் என்னை தவறாக நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. இது எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. மாணவர்களை நான் கோபத்தில் திட்டியிருப்பதால் அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். என்னிடம் பயின்ற மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். நான் அவர்களை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். எனது மனைவி மற்றும் தாயாரையும் மிஸ் பண்ணுகிறேன் என சரவணன் அந்த டைரியில் எழுதியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |