Categories
மாநில செய்திகள்

பாலியல் தொல்லை புகார்….. நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு… 3 நாள் போலீஸ் காவல்….!!!

பாலியல் தொல்லை புகாரில் கைதான திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை  3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையிலுள்ள முத்தனம்பட்டியில் இயங்கிவரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் அக்கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 20ம் தேதி கல்லூரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திடீரென்று திண்டுக்கல் பழனி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விடுதி காப்பாளர் அர்ச்சனாவை காவல்துறையினர் கைது செய்த நிலையில், கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன் கடந்த 23ஆம் தேதி போளூரில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். தற்போது அவரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |