கொரோனா தடுப்பூசி குறித்து எந்த கருத்தும் கூற போவது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், இதற்கு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ‘கொரோனா தடுப்பூசி சந்தேகம் பற்றி எந்த கருத்தையும், உத்தரவையும் தெரிவிக்கப் போவதில்லை. கொரோனா தடுப்பூசி குறித்த பல்வேறு தரவுகளை உலக சுகாதார நிறுவனம் சான்றுகளாக தந்துள்ளது’ என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.