தமிழக பாஜக கட்சியின் அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, உங்களுக்கு தெரியும் இந்த கட்டிடம் என்பது சாதாரண சட்டம் கிடையாது பாரதிய ஜனதா கட்சியினுடைய உயிர், உள்ளம்,இங்கே பேசும் பொழுது நம்முடைய முன்னாள் மாவட்ட தலைவர்கள் சாமிநாதன், பழனிச்சாமி அவர்கள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
ஏனென்றால் அரும்பாடுபட்டு 30 வருஷத்துக்கு முன்னாடி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியை அரும்ப்பாடுபட்டு வளர்த்தவர்கள். தேசிய தலைவர் வந்து உங்களுக்காக… நாட்டு மக்களுக்காக திருப்பூர் மக்களுக்காக… திருப்பூரில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்களுக்காக…. இந்த கட்டிடத்தை ஜே.பி நட்டாஜி அவர்கள் திறந்து வைக்கிறார்கள்.
அதே நேரத்திலே திருப்பூர் மட்டுமல்ல பக்கத்து மாவட்டமான ஈரோடு, திருபத்தூர், திருநெல்வேலியில் ஒரே நேரத்தில் கட்டட திறப்பு விழா நடந்து கொண்டிருக்கின்றது. ஒரே நாளிலே 4 கட்டட திறப்பு விழாவை செய்கின்றோம். பொங்கல் திருநாளில் 6 மாவட்டத்தில் திறப்பு விழா நடக்கிறது, அது முடிந்து மார்ச்சில் இன்னும் ஒரு 6.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் இதுதான் ஒரு சாட்சி, அற்புதமான ஒரு கட்டிடத்தை கட்டி அதன் மூலமாக கட்சி பணிகள் நடக்கின்ற போது நமக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகம் வருகிறது, 2026ல் பாரதிய ஜனதா கட்சி உடைய ஆட்சி 2026ரில் 150 எம்.எல்.ஏக்களை பெற்று கோட்டையில் அமர்வோம் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
அது மட்டுமல்ல இது ஒரு சரித்திரமாக நாள் 118 கோடி தடுப்பூசி டோஸ். இந்தியாவிலேயே தயாரித்து நரேந்திரமோடி உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வீட்டு வாசலுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். மிகப்பெரிய சரித்திரம் இது, மிகப்பெரிய சாதனை இது. உலகத்தில் எல்லா நாடுகளும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது 118 கோடி டோஸ்,
நம்முடைய கட்சியில் மட்டும் தான் ஒரு சாதாரண மனிதன் எங்கே இருந்தாலும் கூட கண்டுபிடித்து அலங்காரம் படுத்துவோம், கோபாலபுரத்திலே பிறந்து இருக்க வேண்டும், ஒரே குடும்பத்திலே பிறந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது . எப்போது எங்கே வேலை செய்தாலும் கூட இந்த கட்சி உங்களை கண்டெடுத்து இங்கே இருக்கின்ற முருகன்ஜி அவர்களை போல, இங்கே இருக்கின்ற மனிதர்களை போல அலங்காரம் செய்யும். உங்கள் சாட்சியாக இந்த கட்டிடம் திறக்கப்படுகிறது என தெரிவித்தார்.