ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘உயிரே’ பாடல் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், அலியாபட், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The highly emotional video song of #Uyire is all set to stir hearts#RRRSoulAnthem,conceived by @ssrajamouli & composed by @mmkeeravaani out now!https://t.co/7zVrGHWrkG@tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @DVVMovies @RRRMovie @LycaProductions @LahariMusic @TSeries pic.twitter.com/2D3wU5VJh2
— Lyca Productions (@LycaProductions) November 26, 2021
தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து நட்பு, நாட்டுக் கூத்து ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற உயிரே பாடல் வெளியாகியுள்ளது. எமோஷனலான இந்த பாடல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.