Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் இராசிக்கு… “அன்பை கண்டு நெகிழ்வீர்கள்”.. திறமையை பயன்படுத்துவீர்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தினரின் அன்பை கண்டு நெகிழ்வீர்கள். தடைகளை தகர்த்து எறிந்து முன்னேறி செல்வீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். உடல் நலனில் மட்டும் அக்கறை கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரவில் இருந்த தடை நீங்கும். காரிய வெற்றியும் இருக்கும்.

உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் நல்லபடியாக இருக்கும். சொன்ன சொல்லையும் நிறைவேற்றி காட்டுவீர்கள். இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் பொறுமையாக செல்லுங்கள். பயணங்களின் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். அது மட்டுமில்லாமல் கொடுக்கல்வாங்கல் விஷயங்களில் கூட ரொம்ப கவனமாக செயல்படுங்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் கர்ம தோஷங்கள் அனைத்துமே நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |