பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதியார் அவர்கள் பிறந்த ஊர், ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடு’ என்று சொன்ன பாரதியார் பிறந்த ஊர் இது. அந்த ஊரிலேயே உங்களுக்கு தெரியும்…. இந்தியா முழுவதிலுமே 60 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா காலகட்டத்திலே ஏழைகளுக்கான உணவு திட்டத்தின் மூலமாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வீடு வீட்டுக்கு நம்முடைய பாரத பிரதமர் கொண்டு போய்ச் சேர்ந்திருக்கிறார்.
இதைப்போன்ற பல கட்சி பணிகள் நான் செய்ய வேண்டும் என்றால் ஒரு அற்புதமான அலுவலகம் வேண்டும், இதிலிருந்து நம்முடைய கட்சி பணி மிக தீவிரமாக இருக்க வேண்டும், மூலை முடுக்கெல்லாம் நம்முடைய சகோதர சகோதரிகள் செல்ல வேண்டும், பாஜகவினுடைய தாமரை அனைத்து இடத்திலும் வர வேண்டும், நடக்கப்போகின்ற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகரத்திலே பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும்.
அதே போல வரப்போகின்ற அனைத்து தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் அதனுடைய துவக்கம் இங்கு இருக்கக்கூடிய எங்களுடைய உயிர்…. எங்களுடைய ரத்தம், எங்களுடைய சதை இந்த கட்டிடம். இந்த அற்புத திறப்பு விழாவிற்கு இங்கே வந்திருக்கக் கூடிய அனைத்து சகோதர சகோதரிகள் நன்றியை தெரிவித்து இது நம்முடைய மேடை கிடையாது, இது நம்முடைய தேசத் தலைவர் ஜே.பி.நட்டாஜி அவர்களுடைய மேடை.
அவர் உங்களிடம் பேசுவதற்கு டெல்லியில் இருந்து வந்து இருக்கின்றார். உங்களை பார்க்க வேண்டும், அவருடைய கருத்துகளை சொல்ல வேண்டுமென்று வந்திருக்கிறார். அதிகமாக நேரம் எடுத்துக்கொள்ளாமல், நேரடியாக தேசிய தலைவர் ஜே.நட்டா அவர்கள் இந்த அற்புதமான திருப்பூர் மக்களுக்கு பேச வேண்டும். உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள் நீங்கள். தனியாக இருந்து கஷ்டப்பட்டு, திருப்பூர் என்ற நகரை இன்டர்நேஷனல் மேப்பில் பதிவு செய்தவர்.
உங்களுக்கு தெரியும் திருப்பூரில் இருந்து வரக்கூடிய பின்னலாடை, திருப்பூரில் இருந்து வரக்கூடிய அனைத்து பொருட்களும் உலகம் முழுவதும் செல்கின்றது. இங்கே தொழிலாளியாக, தொழிலதிபராக, முதலாளியாக அனைத்து மக்களுமாக உங்களுடைய பங்கு இருக்கிறது. அதனால் உங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஒரு எப்போதும் கூட நன்றிக் கடன் பட்டிருக்கிறது உங்களுடைய உழைப்புக்கு, வேர்வைக்கு.
அதனால் இந்த அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நம்முடைய சக்கரவர்த்தி அவர்கள், அந்த மனிதர் இந்த அனைத்து கட்டிடத்தையும் கட்டி முடித்தவர், மாநிலத்தின் துணை தலைவர் பம்பரம் போல் சுழன்று அனைத்து கட்டிடத்தையும் வேகமாக கட்டி முடித்து தந்திருக்கின்றார், அவருக்கு நன்றி என பேசி முடித்தார்.