நியூ லுக்கில் இருக்கும் சூர்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. ஞானவேல் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”ஜெய்பீம்”. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சூர்யா, சிவகுமார் மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவை சந்தித்துள்ளனர். அவர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் நியூ லுக்கில் இருக்கும் சூர்யாவின் புகைபடங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.