இசைவாணி, பாவனி தான் எனக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் என தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இசைவாணி கடைசியாக எலிமினேஷன் ஆனார். இதனையடுத்து பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின் ரசிகர்களின் கேள்விக்கு இசைவாணி பதில் அளித்துள்ளார்.
அப்போது, பிக்பாஸ் வீட்டில் உங்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் யார் என ரசிகர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த இசைவாணி, பாவனி தான் எனக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் என தெரிவித்துள்ளார்.