கிளர்ச்சி படையினர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபரது மகன் மீது சர்வதேச கிரிமினல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளதால் அவர் தற்போது அந்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு தாக்கல் செய்த வேட்பு மனுவை லிபிய நாட்டின் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
லிபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சி படையினர்களால் அந்நாட்டின் பிரதமர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது லிபியாவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
அவ்வாறு நடைபெறவுள்ள லிபிய நாட்டின் பிரதமர் தேர்தலுக்காக கிளர்ச்சி படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் லிபிய நாட்டின் தேர்தல் ஆணையம் கிளர்ச்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமரின் மகனுடைய வேட்பு மனுவை நிராகரித்துள்ளது. ஏனெனில் அவரது மீது நீதிமன்றத்தில் சர்வதேச கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.