Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN :லிட்டன், முஷ்பிக்கூர் அசத்தல் ஆட்டம் ….! முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 253/4….!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 253 ரன்கள் குவித்துள்ளது.

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணியில் களமிறங்கிய  ஷாம்ன் இஸ்லாம், சைஃப் ஹொசைன், நஜ்முல் ஹொசைன் ஆகியோர் தலா  14 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் மொமினுல் ஹக் 6 ரன்னில் வெளியேறினார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த  முஷ்பிக்கூர் ரஹீம் – லிட்டன் தாஸ் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் லிட்டன் தாஸ் சதமடிக்க ,மறுமுனையில் விளையாடிய  முஷ்பிக்கூர் ரஹீம் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்துள்ளது. இதில் லிட்டன் தாஸ் 113 ரன்னும், முஷ்பிக்கூர் ரஹீம் 82 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

Categories

Tech |