Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திருச்சி மாவட்டத்தில் நாளை…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழையின் தாக்கத்தைப் பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.

இன்று கூட பல மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக நாளையும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், பெரம்பலூர்  உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |