தென்னாபிரிக்காவில் பி.1.1.529 என்ற உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனாவை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்கள், தடுப்பூசி மட்டுமன்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சமீப நாட்களில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.
ஆஸ்திரிய நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாற்றமடைந்த கொரோனா தொற்றை கண்டறிந்திருக்கிறார்கள். இது தொடர்பில், இங்கிலாந்தில் சுகாதாரத்துறை அமைச்சகமானது, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், இந்திய விமான நிலையங்களில் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
எனவே, தென்னாபிரிக்கா, போட்ஸ்வனா ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்களை விமான நிலையத்தில் தீவிரமாக பரிசோதனை செய்ய வேண்டுமென்று மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய தொற்று இஸ்ரேலிலும் கண்டறியப்பட்டிருக்கிறது என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.