கோவை அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், சென்னை மாநகரப் பகுதி போன்று கோவை மாநகர பகுதி வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. கோவை மாநகரத்தின் வளர்ச்சியை முறைப்படுத்துவதற்க்காக கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதனடிப்படையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இருக்கு.
ஏதோ அறிவிச்சோம், போனோம் என்று இல்லாமல், திட்டங்கள் குறித்து இதையெல்லாம் ஆய்வு நடத்தி, இதையெல்லாம் விரைவுபடுத்துவதற்காக தான் செந்தில்பாலாஜி அவர்களிடம் ஒப்படைத்து, பணியை மேற்கொண்டு இருக்கிறார். அவரும் பல நேரங்களில் ஓய்வெடுக்காமல் உழைக்கக் கூடியவர் தான். அப்படி உழைக்கக்கூடிய நபரை தான் தேர்தெடுத்து உங்களுக்கு நாங்கள் கொடுத்து இருக்கின்றோம்.
அந்த வகையில் கோவை மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக, அனைத்து உட்கட்டமைப்பு கொண்டிருக்கக்கூடிய மாவட்டமாக்க உறுதி எடுத்துள்ளோம். கோவையை பொறுத்தவரை வளம் கொண்ட தொழில் மாவட்டமாகும். பெரிய தொழில் மட்டுமல்ல, சிறு குறு தொழில்களும் இந்த மாவட்டத்தில் அதிகம். தொழில்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு ஏற்றுமதி வருவாய் தரக்கூடிய மாவட்டம் இது தான் என ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.