தனது பிறந்தநாளில் ஆடம்பரங்களை தவிர்த்து நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டுமென திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிளெக்ஸ் பேனர் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற ஆடம்பரங்களை தவிர்க்க வேண்டும். ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவை நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்த வேண்டும். மக்கள் பணியே எனக்கான பிறந்தநாள் பரிசு என அறிக்கை வெளியிட்டுள்ளார்.