விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று அன்றாட பணிகளில் தகுந்த முன்னேற்பாடு அவசியம். தொழில் வியாபாரத்தில் அளவான பணவரவே இன்று கிடைக்கும். உறவினர் வகையில் திடீர் செலவு கொஞ்சம் ஏற்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு மட்டும் செல்ல வேண்டாம். இன்று உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
உறவினருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். இன்று மற்றவர்கள் பிரச்சினை தீர பாடுபடுவீர்கள். காரியத்தடை தாமதம் போன்றவை இன்று விலகிச் செல்லும். இன்றையநாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். கூடுமானவரை செலவை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் அது போதும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும்.
கூடுமானவரை படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்