Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன்…. 14 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர்..

இன்றும் கூட கனமழையின் காரணமாக 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.. இந்தநிலையில் தமிழகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக நாளை (27.11.2021) 14 மாவட்டங்களுக்கு விடுமுறையளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்..

அதன்படி, திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, ராமநாதபுரம், செங்கல்பட்டு ஆகிய 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |