Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சவால் விடல… வட்டி சேர்த்து கொடுப்பீர்களா ? செம போடுபோட்ட அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு என்ன சொன்னார்கள்… வங்கி கணக்கிற்கு ஆயிரம் ரூபாய் மாசம், அதை எப்ப போடுவார்கள், இந்த ஆட்சி முடிந்து 2026 முடியும் போது கடைசி மூன்று மாதம் போடுவார்களா ? அப்போ ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலிருந்து கணக்குப் போட்டு கொடுப்பார்களா? ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகிறது இன்று ஒவ்வொரு பெண்ணுக்கும் 6 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கிற்கு வந்திருக்கவேண்டும்.

அப்போ இன்றைக்கு நிதித்துறை அமைச்சர் சவாலை ஏற்றுக்கொண்டு இல்லை நாங்கள் மூன்று வருடம் கழித்துதான் பணத்தை கொடுப்போம் ஆனால் மூன்று வருடத்திற்கும் வட்டியும் முதலுமாக கொடுத்துருவோம் என்று சொன்னால் நான் சவாலை திரும்ப எடுத்துக்கிறேன். அதேபோல நிதித்துறை அமைச்சர் சொல்ல வேண்டும்…

நாங்கள் சொன்ன எதையுமே நாங்கள் செய்வோம். ஒரு வருஷம் கழிச்சு செய்தல்கூட ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து எல்லாத்தையுமே கணக்கு செய்து அக்கவுண்டில் போட்டு விடுவோம் என்று சொல்லட்டும். இதையெல்லாம் டைம்பவுண்ட் விஷயங்கள் செய்வதற்காக எவ்வளவு பொய் பேச வேண்டும்.

இது எல்லாத்தையும்விட நிதித்துறை அமைச்சர்  கொடுத்த அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார்…  பெட்ரோல்-டீசல் ஸ்லாப், வரி, வரிவிதிப்பு, வாட் எல்லாம் சொல்கிறார். இது தேர்தல் அறிக்கை கொடுத்த மார்ச் 13 2021 நிதித் துறை அமைச்சருக்கு ஸ்லாப், வாட், வரி விதிப்பு அமைப்பு பற்றி தெரியாதா ? அப்போ  தேர்தல்அறிக்கை கொடுக்கும்போது இந்த பற்றி புரியாதா ? என தெரிவித்தார்.

Categories

Tech |