மனைவியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள தென்றல் நகரில் வீரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய துணிகள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி லட்சுமி அப்பகுதியில் உள்ள கணினி மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு வீரகுமார் லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து போடி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வீரகுமாரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இதற்கான இறுதி விசாரணை நேற்று நடைபெற்றுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி வெங்கடேசன் மனைவியை கொலை செய்த வீரகுமாருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் காவல்துறையினர் வீரகுமாரை பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.