Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உருமாறிய கொரோனா…. அபாய எச்சரிக்கையை விடுத்த விஞ்ஞானிகள்…. நெதர்லாந்தின் அதிரடி அறிவிப்பு….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளை தொடர்ந்து நெதர்லாந்து அரசாங்கமும் அந்நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உருமாறியது தொடர்பாக விஞ்ஞானிகள் அந்நாட்டிற்கு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆகையினால் ஐரோப்பிய நாடுகள் உட்பட இங்கிலாந்து அரசாங்கமும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் விமான சேவைக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நெதர்லாந்து அரசாங்கம் உருமாறிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தென் ஆப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்திற்குள் தரையிறங்கும் விமானங்களுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |