தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிகிறது. மேலும் மக்களின் வாழ்வாதாரம் பாதித் உள்ளதால் தமிழக அரசின் நிவாரண உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சரிடம் வெள்ள நிவாரண நிதி ரூ.2,079 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து கடந்த 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் உள்துறை இணை செயலாளர் ராஜ்சர்மா தலமையில் மத்திய குழுவினர் தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்தனர். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி டெல்லி திரும்பிவிட்டனர். இவர்கள் தயாரித்து அளிக்கும் அறிக்கையின் படி மத்திய அரசு நிவாரணம் வழங்கும். இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. எனவே கனமழையால் மீண்டும் அதிக சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மாநில அரசு கேக்கப்பட்ட நிவாரண நிதி மேலும் அதிகரிக்கும்.
இதனால் மத்திய அரசின் கணக்கீட்டின் மாற்றம் செய்ய வேண்டி இருப்பதால் மீண்டும் மத்திய குழுவினர் தமிழகம் வர வேண்டும். மேலும் அடுத்த 5 நாட்கள் வரை மழை நீடிக்கும் என்பதால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டு மழை குறைந்த பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் வருகின்ற டிசம்பர் முதல் வாரத்தில் நகர்புற ஊராட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஆனால் கனமழை பாதிப்பின் காரணமாக தேர்தல் அறிவிப்புகள் தள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் நிவாரண நிதி தேர்தலுக்கு முன்பாக மக்களின் கைகளில் கிடைத்து விடும் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் வெள்ள நிவாரண நிதி ரேஷன் அட்டைகள் மூலம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெள்ள நிவாரண நிதி மக்களுக்கு கிடைத்தால் பெரிதும் ஆறுதல் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.