பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது.
இதனையடுத்து கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியது, “விவசாயிகளின் அசைக்க முடியாத சத்தியாகிரகம், 700 விவசாயிகளின் உயிர் தியாகம் ஆகியவை இரக்கமற்ற பாஜகவினர் ஆணவத்துக்காக இந்த போராட்டம் நினைவாக கூறப்படும். மேலும் இந்தியாவில் விவசாயிகள் எப்போதும் போற்றப்படுகிறார்கள், இன்னும் போற்றப்படுவார்கள். இதற்கு விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை சான்றாகும்” என்று அவர் கூறினார்.