Categories
மாநில செய்திகள்

நாளை ( 26/11 ) புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை …!!

தமிழ்நாட்டில் தொடர் மழை எதிரொலியாக நாளை 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை அரசு விடுமுறை விட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், அதனையொட்டிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது. இடி மின்னலுடன் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து நாளை பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரி இயங்காது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தின் திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 17 மாவட்டங்களின் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |