இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மேலும் ஊரடங்கு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. அதில் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்களை தடுக்கும் விதமாக சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் மூலமாக நோய் தொற்று பரவும் விகித அளவு குறைந்தது.
மேலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துவிட்டது. மேலும் சர்வதேச விமான நிலையம் உலகின் பிற பகுதிகளுக்கு விமான சேவைகளை வழங்கி வருகிறது இந்த நிலையில் தற்போது டிசம்பர் 15ஆம் தேதி முதல் இந்தியாவில் இந்த சேவையை தொடங்க உள்ளதாக விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
பின்னர் வெளிநாடுகள் 3 வகையாகப் பிரிக்கப்படும் என்றும், அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை தனித்தனியாக பிரித்து அனுப்ப வேண்டும். இதுபோன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டினார்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையும் அடங்கியுள்ளது.