சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தி அவர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகின்றனர்.
இதையடுத்து பல இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது. மேலும் நோய்களை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் முதல்வர் முக. ஸ்டாலின் இன்று சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழையால் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும், திரு.வி.க நகர் 73-வது வார்டு ஸ்டீபன்சன் சாலையில் பாலப் பணிகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இந்தப் பணிகளின் போது பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆணையிட்டார். பின்னர் சிவ இளங்கோ சாலை, பெரவள்ளூர் காவல் நிலையம் எதிரில் உள்ள பகுதி, அசோகா அவென்யூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், திருகே. என் நேரு, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பிகே சேகர்பாபு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் உடனிருந்தனர்.