புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரஸ்களை விட ஆபத்தானவை என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பி. 1.1.529 என்ற வைரஸ் காற்றின் மூலம் வேகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து இஸ்ரேல் நாட்டிலும் புதிய வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய டுவிட்டர் பதிவில், தென் ஆப்பிரிக்க நாடுகளில் புதிய கரோனா வைரஸ் பரவி வருகிறது.
எனவே ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பரவிவரும் கொரோனா வைரஸ் நம் மாநிலத்திற்குள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாங்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம். உங்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கிறோம். நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.