நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏராளம். அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவ தொடங்கியது. அதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம். நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.அந்த கோரிக்கையை ஏற்ற அனைத்து மாநில அரசுகளும் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களுக்கு நிவாரணம் வழங்கி வருகின்றன. அவ்வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.