கடலூர் மாவட்டத்தில் பாமக ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி தலைவர் ஜிகே மணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் மேலும் 2 தொகுதியில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் நம் கட்சிக்காரர்கள் வெற்றி பெறாமல் செய்தார்கள் .அதிலும் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் இருந்தவர்ள் உள்ளாட்சி தேர்தலில் ஏன் எல்லா இடங்களிலும் வேட்பாளர்கள் போட்டியிட வில்லை?
விலை போனோமா? விட்டு கொடுத்தோமா? நீங்கள் எல்லோரும் ஆண்ட பரம்பரை வழி வந்தவர்கள். உங்கள் முன்னோர்கள் படை நடத்திய பாண்டவர்கள். மன்னர்களாக இறந்தவர்கள். அவர்களின் வழி வழியாக வந்தவர்கள் தான் சிங்கக்குட்டிகளாகிய நீங்கள். இன்று எல்லாவற்றையும் இழந்து செங்கோலை இழந்து ஆட்சிக்கு வராமல் அடுத்தவர்களுக்கு துதி பாடிக் கொண்டிருக்கிறோம். வரும் தேர்தலில் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைந்திட தீவிரமாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.