Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு சற்று குறைந்து விட்டதால் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடு, அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்து மாநிலம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் வரும் டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 24 வரை அரசின் திட்டங்கள் முறையாக பள்ளிகளில் செயல்படுகிறதா? கற்றல், கற்பித்தல் செயல்பாடு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து கனமழை காரணமாக தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை ஆய்வு மேற்கொள்கிறது.

Categories

Tech |