தென்கொரிய அரசு சிறப்பு பணிக்குழு ஒன்றை நாய் மாமிசத்தை தடைசெய்யும் பொருட்டு உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரிய அரசு சிறப்பு பணிக்குழு ஒன்றை நாய் மாமிசத்தை தடைசெய்யும் பொருட்டு உருவாக்கியுள்ளது. அதாவது தென்கொரியாவில் ஒவ்வொரு ஆண்டும் மாமிசத்துக்காக சுமார் 10 லட்சம் நாய்கள் கொல்லப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தென்கொரியாவுக்கு சர்வதேச அளவில் ஏற்படும் சங்கடங்களை தவிர்ப்பதற்காக அதிபர் Moon jae நாய் மாமிசத்தை தடை செய்வது குறித்து நாய் மாமிச வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களிடம் கருத்துக்களை கேட்க முடிவெடுத்துள்ளார்.
மேலும் விலங்கு நல ஆர்வலர்கள் அதிபரின் இந்த முடிவுக்கு வரவேற்பு அளித்துள்ளனர். இருப்பினும் மற்றொரு தரப்பு எந்த உணவை சாப்பிடவேண்டும் என்ற மக்களின் தனிப்பட்ட உரிமையை அரசு பறிப்பதாக கூறி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.