Categories
சினிமா தமிழ் சினிமா

‘மிருகத்தனமான மனநோயாளிகள் வேட்டையாடப்படவேண்டும்’ – பதறிப்போன கீர்த்தி சுரேஷ்..!!

ஹைதராபாத்தில் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என நடிகை கீர்த்தி சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அரசு கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று இரவு மிருகத்தனமான கொடும் வெறியர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என பல்வேறு விதமான கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவர் பிரியங்கா ரெட்டியை எரித்துக்கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நடிகை கீர்த்தி சுரேஷ் கடிதம் ஒன்றை எழுதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட செய்தி கேட்டு எனது இதயமே பதறிப்போனது.

இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு பெண் என்று எந்த நேரத்திலும் தனியாக இந்த நாட்டில் பயமின்றி நடக்க முடியும் என்ற பாதுகாப்பான தருணம் ஏற்படுமோ என தெரியவில்லை. இதில் தொடர்புடைய அனைத்த கொடிய மிருகத்தனமான மனநோயாளிகளையும் வேட்டையாடி, விரைந்து தண்டிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |