தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்தமான் அருகே நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் அதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் என். ஆர்.ரவிவை முதல்வர் ஸ்டாலின் நின்ற சந்திக்க உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 11 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.