Categories
சினிமா தமிழ் சினிமா

டிஜிட்டல் களத்தில் கலக்க வரும் செல்ஃபி புள்ள..!!

டிஜிட்டல் தளத்தில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வரும் அமேசான் பிரைமில் இடம்பெறும் ‘த ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ‘த ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் நடிக்கவிருப்பதாகத் தனது ட்வீட்டில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.குடும்பஸ்தனாக சீரிஸில் வலம் வரும் நாயகன் மனோஜ் பாஜ்பாய், தேசிய புலனாய்வு நிறுவனத்தில் ரகசியமாகப் பணியாற்றி வருவதைப்போல முதல் பாகம் வெளி வந்தது.

இந்த சீரிஸ் வெளியான நாள் முதலே மக்களை ஈர்த்து வந்தது. இந்நிலையில் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் சமந்தா நடிக்கயிருப்பது ரசிகர்கள், மத்தியில் கூடுதல் கவனத்தைக் கொண்டு வந்துள்ளது. முதல் முறையாக சீரிஸில் நடிக்கவிருப்பதால் சமந்தா செம குஷியில் உள்ளாராம். ‘த ஃபேமிலி மேன்’ முதல் பாகத்தில் பிரியாமணி நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் சமந்தா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Categories

Tech |