திரிபுராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இஸ்லாமியர்களுக்கு எதிரான, இடதுசாரி சக்திகளுக்கு எதிரான பாஜக மற்றும் சங்பிரிவார் கும்பல் வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கிற வகையில் வன்முறையாளர்களை கைது செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்ற மனிதவளத்துறை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மேல் போடப்பட்டிருக்கின்றன உபா என்னும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிய பெற்றிருக்கின்ற வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், மேலும் கைது செய்யப்பட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்ற வகையில், நாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன்,
திரிபுரா எத்தகைய அரசியல் பின்னணி மற்றும் சமூக பின்னணியை கொண்டிருக்கின்ற மாநிலம், என்பதை எனக்கு முன் பேசிய தலைவர் பெருமக்கள் கூறியிருக்கிறார்கள். 30,35 ஆண்டுகாலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்த மாநிலம். பழங்குடியினர் வசிக்கும் மாநிலம் திரிபுரா. அந்த மாநிலத்தில் பழங்குடி மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்த தசரத் தேவ் அவர்களின் சிலையை இவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றதும், கம்யூனிஸ்ட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அண்மையில் அந்த சிலையை பெயர்த்து எறிந்து இருக்கிறார்கள். குப்பற சாய்த்து இருக்கிறார்கள், வன்மத்தை கக்கியிருக்கிறார்கள்.
நான் அடிக்கடி மேடையிலேயே சொல்லுவதுண்டு சங்பரிவார்கள் எதிரிகளின் வரிசையில் பகைவர்களின் வரிசையில் காங்கிரஸ் மட்டும் இல்லை, இஸ்லாமிய, கிறித்தவ சமூகங்கள் மட்டும் இல்லை, இடதுசாரிகள் சிந்தனையாளர்களின் அழித்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்று அவர்கள் வகைப் படுத்தி வைத்திருக்கிறார்கள், இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.