Categories
தேசிய செய்திகள்

வறுமை பட்டியலில்…. முதலிடம் எந்த மாநிலம் தெரியுமா…? அதிர்ச்சி தகவல்…!!!

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு திட்டம் மற்றும் ஐ.நா., வளர்ச்சி திட்டம் ஆகியவை வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி வறுமை குறியீடு பட்டியலை நிடி ஆயோக் முதல் முறையாக வெளியிட்டுள்ளது.
சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த குறியீடு அளவிடப்படுகிறது. ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உயிரிழப்பு விகிதம், கர்ப்ப கால பராமரிப்பு, பள்ளி படிப்பு, பள்ளியில் வருகை விகிதம், சமையல் எரிவாயு, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீட்டு வசதி, சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளின் அடிப்படையில் இவை மதிப்பிடப்படுகின்றன.

இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வறுமை குறியீடு பட்டியலின் படி, நாட்டின் வறுமை மிகு மாநிலமாக பீஹார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளன. பீகார் மக்கள் தொகையில் 51.91 சதவீதம், ஜார்க்கண்டில் 42.16 சதவீதம், உ.பி.,யில் 37.79 சதவீதம் பேர் வறுமையில் உள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில் மத்திய பிரதேசம், மேகாலயா உள்ளன. இந்த பட்டியலில் கேரளா, கோவா, சிக்கிம், தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் கடைசியில் உள்ளன.

Categories

Tech |