Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ரகசியப் பயணம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்கானிஸ்தானுக்கு ரகசியமாகச் சென்று, அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களைச் சந்தித்து ‘தாங்கிஸ் கிவ்விங்’ எனப்படும் நன்றி கூறும் நிகழ்வில் பங்கெடுத்தார்.

உள்நாட்டுப் போரில் உழன்றுகிடக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று ரகசியப் பயணம் மேற்கொண்டார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே அமைந்துள்ள பக்ரம் விமானப் படை தளத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு தரையிறங்கிய ட்ரம்ப், அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ‘தாங்க்ஸ் கிவ்விங்’ எனப்படும் நன்றி கூறும் நிகழ்வில் பங்கெடுத்தார்.

Image result for This Thanksgiving, we are thankful to all who wear our Nation's uniform, allowing us to celebrate in safety and peace.

அப்போது, தலிபான்களுடன் அமெரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், போர் நிறுத்தமே தலிபான்களின் விருப்பமாக உள்ளதெனவும் ட்ரம்ப் அவர்களிடம் தெரிவித்தார்.பின்னர், அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானியைச் சந்தித்துப் பேசினார்.

Image result for This Thanksgiving, we are thankful to all who wear our Nation's uniform, allowing us to celebrate in safety and peace.

அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் வெளியிட்டிருந்த வீடியோவில் அவர்களுடன் வெள்ளை மாளிகை முக்கிய ஊழியர், செய்தித்தொடர்பாளர் ஸ்டெஃபெனி கிறிஸ்ஹாம், தேசிய பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர், செய்தியாளர்கள் குழு ஒன்று அதிபருடன் சென்றிருந்தனர்.

Categories

Tech |