தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது.
இந்நிலையில் உதவி வேளாண் அலுவலர் பதவிக்கான மூல சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்த விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.