தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 29 அந்தமான் அருகே உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 5 நாட்களுக்கு தீவிர மழை இருக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.